
சாட்சிகள்
உங்களுடைய “வெளிப்படுத்தின விசேஷம் (The Book of Revelation)” வகுப்புகளில் கலந்து கொள்கிறேன். என் வாழ்க்கை சிறிது சிறிதாக மாற்றமடைந்து வருகிறது. நான் தேவனால் முழுநேர ஊழியத்திற்கு அழைக்கப்பட்டு, ஒரு சுவிசேஷகனாக வல்லமையுடன் ஊழியம் செய்து வந்தேன். ஆனால் அபிஷேகத்தைக் கையாளத் தெரியாததால் விழுந்துபோனேன். புகழ்ச்சியைக் கையாளத் தெரியாமல் பெருமைக்கு மனதில் இடம் கொடுத்துவிட்டேன். பல ஆண்டுகளாக என் இருதயம் வேதனையுடன் இருந்தது, தேவன் எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுப்பார் என்று நம்பியிருந்தேன். உங்கள் வகுப்பில் சேர்ந்து, உங்கள் போதனைகளைக் கேட்கத் தொடங்கியதிலிருந்து என் வாழ்க்கையில் இருந்த பல பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. நானும் கர்த்தராகிய யெஷுவா போல மாற விரும்புகிறேன்.
D P
மலேஷியாயூட்யூபில் உங்கள் செய்திகளைக் கேட்கத் தொடங்கியதிலிருந்து என் வாழ்க்கை மாறியிருக்கிறது. தேவன் என் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்து வருகிறார். தேவனுக்குக் காத்திருப்பது எப்படி என்பதையும், என்னை நானே ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி இருக்க வேண்டும் என்பதையும் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். உங்கள் வேதபாடத்தின் மூலம் ஆவியில் வளர்ச்சியடைந்து வருகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
R R
தென் ஆப்பிரிக்காநான் “சுகமளிக்கும் நிகழ்ச்சியை நேரலையில்” பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜெபிப்பதற்கு சிறிது எண்ணெய் எடுத்துக் கொள்ளுமாறு தேவனுடைய ஊழியக்காரர் சொன்னார். பின்னர், குருட்டுக் கண்கள் திறக்கும்படி ஜெபித்த அவர், சற்று நேரத்தில் “தெளிவாகப் பார்க்க” முடியாதவர்களை கர்த்தர் சுகமாக்கும்படி ஜெபித்தார். நான் சுகமடைந்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
C M
சான் டியாகோ, கலிஃபோர்னியாதீர்க்கதரிசன மாநாட்டின்போது, அதிசீக்கிரத்தில் நிகழவிருக்கும் கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தமாகும்படி அதிகமாக உணர்த்தப்பட்டேன். மனந்திரும்பவும், இந்தக் கடைசிக் காலங்களில் எப்படி வாழ்வது என்பதை அறியவும் வழிநடத்தப்பட்டேன். தேவனுக்கு நன்றி.
C W
ஆஸ்திரேலியாபல ஆண்டுகளாக ஏஞ்சல் டிவி பார்த்து வரும் நான் அநேக காரியங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னையும், என் பிள்ளைகளையும் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக இருக்கும்படி பயிற்றுவிப்பதைக் குறித்த தேவனுடைய வார்த்தையை அதிகம் கற்றுக்கொள்கிறேன். தேவனுக்கு மகிமை!
J H
ஃப்ளாரிடாகோவிட்-19 காலத்தில் யூட்யூபில் உங்கள் செய்திகளைக் கேட்டேன். தேவன் எனக்கு அந்நியபாஷை வரத்தைக் கொடுத்து ஆசீர்வதித்திருந்தாலும், குறைந்தது தினமும் ஒருமணி நேரமாவது அந்நியபாஷையில் பேசி தேவனுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதை அறியாதிருந்தேன். யூட்யூபில் உங்கள் செய்திகளைக் கேட்டது முதல் தினமும் அந்நியபாஷையில் பேசி ஜெபித்து வருகிறேன்.
A M
தெலுங்கானா, இந்தியாஎனக்கு 70 வயதாகிறது. ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். உங்களுடைய “டீ வித் ஐயா (Tea With Iyyah)” நிகழ்ச்சி மிக அருமையாக இருக்கிறது. அது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல மனுக்குலம் முழுவதற்கும் பிரயோஜனமான ஒரு நிகழ்ச்சி.
M J
இந்தியாகழுகின் கண்கள் (Eagle’s eyes)” நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும், அதை அனுபவித்து மகிழ்கிறேன். அதில் அநேக வெளிப்பாடுகள் கிடைக்கின்றன. சபைகளில் அரிதாகிக் கொண்டிருக்கும் தேவனுடைய அக்கினியுடன் நீங்கள் பேசுகிறீர்கள். உங்களுடைய திரைப்படமும் நன்றாக இருந்தது.
K L
சிங்கப்பூர்கழுகின் கண்கள் (Eagle’s eyes)” நிகழ்ச்சியை முழுமனதுடன் பாராட்டுகிறேன். முதல் வீடியோவிலிருந்து எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து மகிழ்கிறேன். கழுகின் கண்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கும்படி கர்த்தர் எனக்கு உணர்த்தினார். உங்கள் நிகழ்ச்சிகளுக்காக நன்றி. உங்கள் வார்த்தைகள் மிகுந்த ஆசீர்வாதமாக உள்ளன.
N K
பெங்களூரு, இந்தியாஎன் அத்தை திருமணமான அடுத்த ஆண்டில் கருவுற்றார்கள். ஆனால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயாராக இல்லாததால் சற்று கலக்கமடைந்தார்கள். சரியான நேரத்தில் தேவன் எங்களை “சிசுவே கேள் (Beten Yatsar)” நிகழ்ச்சியைப் பார்க்கும்படிச் செய்தார். அதன் மூலம் என் அத்தை குழந்தை பிறப்பின் நன்மை கர்த்தரிடமிருந்தே வரும் உண்மையான ஆசீர்வாதம் என்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையில் மனந்திரும்பி, தன் மனநிலையில் மாற்றமடைந்தார்கள். கிறிஸ்து இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
B A
இந்தியாநான் எப்போதும் உங்கள் செய்திகளைப் பதிவிறக்கம் செய்து கேட்பதுண்டு. அவை அழகாகவும், ஆசீர்வாதமாகவும் இருப்பதோடு, என் விசுவாசத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றன. கர்த்தருக்குள் பலப்பட எனக்கு உதவியதற்காக நன்றி.
H D
நைஜீரியா“மாஸ்டர்ஸ் டேபிள் (Master’s Table) நிகழ்ச்சியில் நீங்கள் கற்பிக்கும் பெரிய மற்றும் எளிய ஆவிக்குரிய சத்தியங்கள் மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கின்றன. அதனால் எங்கள் வாழ்க்கையில் பல பாவங்களை மேற்கொள்ள முடிந்தது. பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருந்தும் தேவனோடு வாழ்வது இப்போதுதான் எளிதாகியிருக்கிறது. என் வாழ்க்கையில் 16 ஆண்டுகளாக நான் சுயபுணர்ச்சி பாவத்தினால் போராடினேன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் இத்தனை ஆண்டுகால போராட்டத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இனி போராட்டமே இல்லை, பிசாசை வெளியில் வைப்பது எப்படி என இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. தேவனுக்கு மகிமை.
F O
கானாஉங்கள் யூட்யூப் நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். மிக அருமையாக இருக்கும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எனக்குள் மாற்றங்கள் நிகழ்கிறது. என்னைத் தாழ்த்தி, சுயத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்காக வாழத் தொடங்கியிருக்கிறேன்.
V P
இந்தியாஎன் மீது மாபெரும் இரக்கம் வைத்ததற்காகவும், ஏஞ்சல் டிவி பார்க்கும்படி என்னை நடத்தியதற்காகவும் உன்னதமான தேவனாகிய கர்த்தருடைய மகாபெரிய நாமத்தை ஸ்தோத்திரிக்கிறேன். உங்கள் மூலமாக பேசப்படும் வார்த்தைகளால் தேவன் என்னை அதிகம் ஆசீர்வதித்திருக்கிறார். என் சந்தோஷத்தை இந்தக் கடிதத்தில் எழுத வார்த்தைகளே போதாது. கர்த்தராகிய இயேசுவால் பயன்படுத்தப்படும்படி உங்களை நீங்கள் ஒப்புக்கொடுத்திருப்பதற்காக நன்றி, ஐயா.
E F
அபுஜா, நைஜீரியாதீர்க்கதரிசன மாநாட்டின் செய்தியில் போதகர் ராஜன் ஜான் அவர்கள் என் பெயரைச் சொல்லி அழைத்து, என்னுடைய கடந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிச் சொல்லி, கர்த்தர் என்னை எப்படி ஆசீர்வதிக்கப் போகிறார் என்பதையும் அறிவித்தார்.
M.E. படித்து பேராசிரியராகப் பணியாற்றி வந்த என்னை கர்த்தர் தம் ஊழியத்திற்கு அழைத்தார். உடனே நான் எல்லாவற்றையும் விட்டு, என்னை அவருடைய ஊழியத்திற்காக ஒப்புக்கொடுத்தேன். போதகர் ராஜன் ஜான் மூலமாக இயேசு என்னுடன் பேசியபோது, எதிர்காலத்தைப் பற்றி என் ஆவியில் திடநம்பிக்கை உண்டாயிற்று. பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் என் வாழ்க்கைக்கான கர்த்தருடைய திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
D
இந்தியா“டீ வித் ஐயா (Tea With Iyyah)” நிகழ்ச்சியை தினமும் பார்த்து வருகிறேன். அது எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான காரியங்களைக் கற்றுக் கொண்டேன்.
E S
இந்தியாஉங்களுடைய அழகான நிகழ்ச்சிகளுக்காக, குறிப்பாக “வாருங்கள் தொழுவோம்” நிகழ்ச்சிக்காக நன்றி. உண்மையில் அவை மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கின்றன.
B W
தெற்கு சூடான்“மணவாட்டியே ஆயத்தப்படு” என்ற நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். அது மிகவும் அற்புதமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கிறது.
M R
இந்தியா“டீ வித் ஐயா (Tea With Iyyah)” நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். அதன் மூலம் தேவனுடைய வார்த்தையில் உள்ள பல நுணுக்கமான காரியங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. உங்களுக்கு என் பாராட்டுக்களும், நன்றிகளும்.
V D
பிலிப்பைன்ஸ்நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் “மாஸ்டர்ஸ் டேபிள் (Master’s Table) நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினோம். அது தகவல் நிறைந்ததாகவும், ஊக்குவிப்பதாகவும் உள்ளது. உங்களுடைய யூட்யூப் நிகழ்ச்சிகளுக்காக நன்றி.
L E
பிலிப்பைன்ஸ்கழுகின் கண்கள் (Eagle’s eyes)” நிகழ்ச்சி எனக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. தேவன் உங்களையும், விருந்தினர்களையும் பரிசுத்தவான்களின் பக்திவிருத்திக்காகவும், ஆயத்தத்திற்காகவும் பயன்படுத்துகிறார்.