எங்களைப் பற்றி

ஏஞ்சல் தொலைக்காட்சி நன்கு சமநிலையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைமுறை நிகழ்ச்சிகள் மூலமாக உலகம் முழுவதையும் சந்திக்கும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனம். ஏஞ்சல் தொலைகாட்சியை துணைக்கோள் மூலமாக உலகெங்கும் உள்ளவர்கள் கண்டுகளிக்க முடியும். ஏஞ்சல் தொலைக்காட்சி தனிச்சிறப்பு மிக்க ஒருங்கிணைந்த உரையாடல் நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும், திரைப்படங்களையும், குடும்ப விவகார நிகழ்ச்சிகளையும், வேதாகம போதனைகளையும், இசை காணொலிகளையும், குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் 95% சொந்தமாகவும் பிரத்தியேகமாகவும் தயாரித்து வழங்கி வருகிறது. எங்கள் நிகழ்ச்சிகள் பலதரப்பட்ட கலாச்சாரங்களையும் மொழிகளையும் கொண்டவர்கள் கண்டுகளிக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றன. தொலைக்காட்சி மூலமாக நிதி திரட்டும் டெலிதான் நிகழ்ச்சிகளோ அல்லது மற்ற அதிபார நிகழ்ச்சிகளோ ஏஞ்சல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதில்லை. இது வணிக விளம்பரங்களே இல்லாத இலவச சேனல். நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க உதவி செய்யும் நலம் விரும்பிகளின் நன்கொடைகளைக் கொண்டு இந்தச் சேனல் இயங்குகிறது.

Sundar-Selvaraj

எங்கள் தரிசனம்

பொதுவான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், விரக்தி, செயலிழப்பு, மனச்சோர்வு, வன்முறை, பாலியல் ஒழுக்கக்கேடுகள், கலகம், போன்றவைகளை பற்றிய படங்களும் செய்திகளும் ஏராளமாக ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் மனித இயல்பின் தரத்தைக் குறைத்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரையும் சிக்க வைத்துவிடுவதோடு, அவர்களை பாவத்திற்கு அடிமைகளாக்கி முடிவற்ற அடிமைத்தனத்திற்குள் தள்ளிவிடுகின்றன - இவற்றைத் தவிர்க்க உதவுவதற்காகவே ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவப்பட்டது. “ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை இருக்கும்!” என்பது ஏஞ்சல் தொலைக்காட்சியின் கருப்பொருள். குடும்பத்தினர் அனைவருக்கும் தேவபக்தி உண்டாவதற்கு ஏதுவாக பக்திவிருத்தி ஏற்படும் விதத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள். அதனால்தான் ஏஞ்சல் தொலைகாட்சியில் உங்களால் பல்சுவை நிகழ்ச்சிகளை பார்க்க முடிகிறது. உண்மையில், ஒவ்வொருவருக்கு ஏற்ற ஒரு விஷயம் இதில் உண்டு!

குறிப்பாக பார்வையாளர்களின் தனிப்பட்ட வாழ்வை தொட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஏஞ்சல் தொலைக்காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில், ஆவிக்குரிய வாழ்வை மேம்படுத்தும் விதமாக இனிய, நட்புரீதியான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. குடும்பப் பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் உறவுகளை சீர்படுத்திக்கொள்ள உதவும் கொள்கைகளையும், வழிமுறைகளையும் வழங்கி வருகிறோம். அதோடு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், நாடகங்கள், திரைப்படங்கள், ஆவிக்குரிய வழிநடத்தல், எழுச்சிமிகு இசை, மற்றும் ஜெபத்திற்கான ஒரு தொலைபேசி இணைப்பும் ஏஞ்சல் தொலைக்காட்சியின் மூலம் வழங்கப்படுகிறது!

எங்கள் சேனல் சிறப்பான வாழ்க்கையையும், சீர்மிகு குடும்பங்களையும், மேம்பட்ட சமுதாயங்களையும் உருவாக்க உதவி வருகிறது! எவ்வித அதிபார நிதிதிரட்டுதலும் இன்றி, கிறிஸ்தவ வாழ்க்கைமுறைக்கு உதவும் மிகச்சிறந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவதற்கு எங்களை அர்ப்பணித்திருக்கிறோம்.

ஏஞ்சல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க உங்கள் நேரத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் விமர்சனங்களை விரைவில் எதிர்பார்க்கிறோம்!

இனிய வாழ்த்துக்களுடன்,

சுந்தர் செல்வராஜ்

தலைவர் & நிர்வாக இயக்குநர்

ஏஞ்சல் பிராட்காஸ்டிங் நெட்வொர்க் ப்ரைவேட் லிட்..

chaticon