எங்கள் சேனல்
நாங்கள் செய்வதென்ன ?
ஏஞ்சல் தொலைக்காட்சி ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் உதவும் தனிச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. பார்வையாளர்கள், இதில் ஒளிபரப்பப்படும் புத்துணர்வூட்டும் நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் சரீரத்திலும், ஆவியிலும், மனதிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழ்க்கைமுறை மாற்றங்களை உண்டாக்கிக் கொள்ளும்படி உற்சாகப்படுத்துவதே எங்கள் நோக்கம். நிகழ்ச்சிகளில் இடம்பெறும் சிறப்பு விருந்தினர்களும் நன்றாகத் தொடர்புகொள்கிற திறமை, அறிவுத்திறன் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எங்களின் கலந்துரையாடல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான நிகழ்ச்சிகளில், அனுதின வாழ்க்கை, மற்றும் சாதாரணமாக அனுதினமும் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடப்படுகிறது.
குடும்பத்தில் அனைவரும் கண்டுகளிக்கும் விதத்தில் எங்களது நாடகங்களும் திரைப்படங்களும் கவனமாகத் தயாரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
மேலும், ஏஞ்சல் தொலைக்காட்சியில், சிறந்த கிறிஸ்தவ பாடல்களும், நல்ல குணங்களை உருவாக்கும் சிறுவர் நிகழ்ச்சிகளும், ஊக்கமூட்டும் பலதிறப்பட்ட பேச்சாளர்களின் போதனைகளும், நேரலை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. ஏஞ்சல் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையின் தரத்தையும் மேம்படுத்தும் விதத்தில் தங்களுக்குத் தகவல் அளித்து, ஊக்குவித்து, கற்பிக்கும் கேபிள் நிறுவனங்களிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்கள்.
துணைக்கோள்
வலைதள ஒளிபரப்பு
முதன்மை கட்டுப்பாட்டு அறை
பகிர்வு
ஏஞ்சல் தொலைக்காட்சி நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வலுவாகவும் வேகமாகவும் விரிவடையும் ஒரு பகிர்வு நெட்வொர்க் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்படுகிறது. எங்களுடைய நவீன முதன்மை கட்டுப்பாட்டு அறை முதல் அழைப்பு மையம் வரையுள்ள பிரதிநிதிகள் அனைவருமே தரத்திற்கும் வாடிக்கையாளருக்கு திருப்திகரமாக சேவை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
துணைகோள்
ஏஞ்சல் தொலைக்காட்சி YAMAL 300K, EUTELSAT 8WC , INTELSAT 20, OPTUS D2, GALAXY 19, INTELSAT 17 & EUROBIRD 9A என்னும் செயற்கைக்கோள்கள் அடங்கிய நெட்வொர்க் மூலமாக உலகெங்கும் 24 மணிநேரமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
தொலைதூர ஒளிபரப்பு தொலைக்காட்சி
எங்களுடைய அலைவரிசை முக்கியமாக இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கேபிள் டிவி நிலையங்களில் தொலைதூர ஒளிபரப்பு அமைப்பில் வழங்கப்படுகிறது. அதோடு, ஆசியா-பசிபிக் -ன் மற்ற பகுதிகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல ஒளிபரப்பு நிலையங்களுக்கும் வழங்கப்படுகிறது. உலகின் மற்ற பகுதிகளுக்கும் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முனைப்பாக திட்டமிடப்பட்டு வருகிறது.
கைபேசி செயலிகள்
ஏஞ்சல் தொலைக்காட்சி செயலிகள் தற்போது ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் கைபேசிகளில் பயன்பட்டு வருகின்றன.
இணையதள தொகுப்பலை
எங்களுடைய அலைவரிசை முக்கியமாக இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கேபிள் டிவி நிலையங்களில் தொலைதூர ஒளிபரப்பு அமைப்பில் வழங்கப்படுகிறது. அதோடு, ஆசியா-பசிபிக் -ன் மற்ற பகுதிகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல ஒளிபரப்பு நிலையங்களுக்கும் வழங்கப்படுகிறது. உலகின் மற்ற பகுதிகளுக்கும் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முனைப்பாக திட்டமிடப்பட்டு வருகிறது.
டிடிஎச் (DTH)
ஏஞ்சல் தொலைக்காட்சி இந்தியாவில் ஏர்டெல் டிடிஎச் மற்றும் வீடியோகான் டி2எச் மூலமாகவும், இலங்கையில் எல்பிஎன்-லங்கா தொலைதூர நெட்வொர்க் மற்றும் சிட்டி கேபிள் மூலமாகவும் ஒளிபரப்பப்படுகிறது.
ஐபிடிவி (IPTV)
ஏஞ்சல் தொலைக்காட்சி க்ளோரிஸ்டார், ஆர்ஓகேயு, தமிழ் ஐபிடிவி (யுஎஸ்ஏ), மற்றும் அனோனா டிவி (இஸ்ரவேல்) ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது.
மொபைல் தொலைக்காட்சி
ஏஞ்சல் தொலைக்காட்சி இந்தியாவின் பிஎஸ்என்எல் (BSNL) கைபேசி நெட்வொர்க் மூலமாகவும் ஒளிபரப்பப்படுகிறது.